Saturday, February 28, 2009

ஆஸ்கரை விட உயர்ந்தவர் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்

இளையராஜாவின் இசைக்கு முன்பு ஆஸ்கர் விருது மிகச் சாதாரணமானது.
சர்வதேச எல்லைகளைக் கடந்தவர் இளையராஜா. ஆஸ்கர் விருதை விட உயர்ந்தது இளையராஜாவின் இசை என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தாயகம் திரும்பியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பிற்பகல் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட செய்தியாளர்ககள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் என குவிந்து விட்டனர். ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ரஹ்மானின் பேட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்தன.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஹ்மான். அப்போது இசைஞானி இளையராஜாவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

இளையராஜா குறித்து ரஹ்மான் கூறுகையில், இளையராஜாவுக்கு முன்பு இந்த ஆஸ்கர் விருதுகள் சாதாரணமானவை. இளையராஜாவின் இசை சர்வதேச எல்லைகளைக் கடந்தது.சரியான முறையி்ல் அவரது இசை எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் எப்போதோ அவர் ஆஸ்கர் விருதினை வென்றிருப்பார் என்று புகழாரம் சூட்டினார்.இந்தியப் படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஹ்மான், ஆஸ்கர் தரத்திற்கு ஏற்றபடி படம் எடுத்தால் நிச்சயம் நமது படங்களுக்கும விருது கிடைக்கும் என்றார்.பேட்டியின் நிறைவில், செய்தியாளர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலின் சில வரிகளைப் பாடினார் ரஹ்மான்.

1 comment:

அம்சுருவாணி said...

திரை இசை பற்றிய இஸ்லாமிய கருத்து என்ன ?


திரை இசை ...அதாவது இசைக்கருவிகளை கொண்ட இசையை இஸ்லாம் ஒப்புக்கொள்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே தோன்றுகிறது. இஸ்லாமில் pop பாடல்களுக்கோ, இசைக்கருவிகளுக்கோ இடமில்லை. இதை பலர் கூறியுள்ளனர்

இயற்கை சப்தங்கள் ...அதாவது பரவை ஒலி, மனித குரல் இவற்றை கேட்கலாம்.

The seventeenth-century Muslim scholar Chelebi distinguishes three categories of music: that coming from birds, from the human throat and from instruments. He states that in Islam it is permissible to listen to the melodies produced by birds, and to those produced by the human throat, subject to certain conditions and rules. To listen to instruments that are blown or struck however, is never permissible

இசைக்கருவிள் வாசிப்பதை ஸல் அவர்கள் ஆதரிக்கவில்லை என்பது பற்றி பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஒரு சில ஆதாரங்கள் மட்டும் எடுத்து போட்டு இருக்கிறோம்...

மேலும் :
http://amsuruvani.blogspot.com/2009/03/blog-post.html