Tuesday, April 14, 2009

விரோதியே வருக வருக!!!

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

விரோதி என்றதும் ஏதோ Enemy என எண்ண வேண்டம். இந்தத் தமிழ் புத்தாண்டின் பெயரே "விரோதி" வருடம். என்னதான் கலைஞர் தை முதல் தேதியைப் புத்தாண்டாக அறிவித்தாலும், தமிழ் போற்றும் நல்லுலகிற்கு சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு. தொன்று தொட்டு வரும் தமிழ் மரபை, ஒரு தமிழ் போற்றும் கலைஞரால் எப்படி மாற்ற இயலும்? None cares his Announcement. 16ம் ஆண்டு நிறைவையொட்டி Sun Tvயில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர். கலைஞர் தொலைக்காட்சியில் எதற்காக சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கினர்? என்ன ஆச்சரியம்?!?! ஜெயாவில் கூட தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் என விளம்பரப் படுத்தவில்லை... ஆனால் எனக்குதான் விடுமுறை இல்லை. கே டிவியில் "அலைபாயுதே". அதனால் அரை நாள் விடுப்பு எடுத்து வீட்டில் பார்க்கலாம் என்ற எண்ணமும் அலுவலகப் பளுவைப் பார்த்ததும் புதைக்கப் பட்டது. மராத்தி வருடப் பிறப்பிற்கு விடுமுறை கிடைத்ததே என்றெண்ணி மனதைத் தேற்றிக் கொண்டேன்.
யாருக்கும் வாழ்த்து கூறக்கூட நேரமில்லை. பெரியம்மா அழைத்ததனால் அவருக்கும் வீணாவிற்கும் வாழ்த்து தெரிவித்தேன். பிறகு சித்திக்கும் ரம்யாவிற்கும். கடமைக்காக ஒவியாவிற்கும் ரசனாவிற்கும்... மனமார்ந்த விஷு வாழ்த்துகளை இந்து, பிஜு, மற்றும் ஸ்ரீஜித்திற்குத் தெரிவித்தேன். சந்தீபாவின் தொலைபேசி அணைக்கப்பட்டு இருந்தது.

ஆச்சரியமாக இந்த ஆண்டு ஒரு தமிழ்ப் படம்கூட release ஆகவில்லை!

இன்று புத்தாடை அணிந்து கொண்டேன். Pink Colour Arrow Shirt & Blue Levis Jeans.

எனக்கும் அனைவருக்கும் இந்த விரோதி நல்லவனாக இருக்குமாறு வேண்டுகிறேன்!!!

P.S : இன்றுடன் நாங்கள் ஈரோட்டை விட்டு பள்ளிபாளையத்திற்கு வந்து 17 வருடங்கள் நிறைவு பெற்றன.

No comments: